/* */

குமரியில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை கொண்டாட கலெக்டரிடம் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை .

HIGHLIGHTS

குமரியில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை கொண்டாட கலெக்டரிடம் கோரிக்கை
X

குமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என   மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளிக்க வந்தனர்.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காலம் முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட பகுதிகளில் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மேலும் 48 நாட்கள் விரதம் இருந்து காவடி கட்டும் பக்தர்கள் சுமார் 125 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக சென்று திருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகம் செய்து விரதத்தை முடிப்பார்கள்.

அதன்படி காவடி திருவிழாவிற்காக குமரி மாவட்டம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் காவடிகள் பூஜையில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்லவும், தரிசனம் செய்யவும் அரசு தடை விதித்து உள்ளது. மேலும் குமரியில் நடைபெறும் பாரம்பரிய காவடி திருவிழாவிற்கு தடை ஏற்படும் என்ற தகவலும் வெளியாகின.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 150 ஆண்டுகளை கடந்தும் நடைபெற்று வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவிற்கு எந்தவித தடையும் இன்றி அனுமதி அளிக்க வலியுறுத்தி குளச்சல் செட்டு சமுதாயம், ஏலூர் செட்டு சமுதாயம், தமிழ்நாடு செந்தூரான் பேரவை உள்ளிட்ட அமைப்பினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனிடையே குமரியில் நடைபெறும் காவடி திருவிழா என்பது தமிழ் கடவுளான முருகனுக்கு நடைபெறும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட திருவிழா. இந்த திருவிழாவை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்திட நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், திருவிழாவிற்கு அரசு தடை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி தடை ஏற்படுத்தினால் மாவட்டம் முழுவதும் முருக பக்தர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

Updated On: 22 Jan 2022 6:28 AM GMT

Related News