/* */

கேரளாவிற்கு கடத்த முயற்சி - 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவிற்கு கடத்த முயற்சித்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கேரளாவிற்கு கடத்த முயற்சி - 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று களியக்காவிளை உதவி ஆய்வாளர் சிந்தாமணி மற்றும் காவலர்கள் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியாக வந்த ஒரு டெம்போவை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த வண்டியை ஓட்டி வந்தது பெருசிலம்பு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (25) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் காட்டாக்கடைக்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. பின்னர் தினேஷை கைது செய்த போலீசார் அந்த டெம்போவையும் 8 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு ரோந்து சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார். பிடிபட்ட டெம்போ மற்றும் ரேஷன் அரிசி குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (CSCID) யிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 6 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்