குமரியில் சமூக வலைதளங்களில் இளம்பெண்ணை அவதூறு செய்தவர் கைது

குமரியில் சமூக வலைதளங்களில் பெண் குறித்து அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் சமூக வலைதளங்களில் இளம்பெண்ணை அவதூறு செய்தவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் குறித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

மேலும் மாணவி தொடர்பாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான நிக்சன் என்பவர் மாணவி தொடர்பாக அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து நிக்சன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Updated On: 24 Sep 2021 6:30 AM GMT

Related News