/* */

ஊரடங்கு விதிமீறல்: குமரியில் 1538 நபர்களுக்கு அபராதம்

குமரி மாவட்டத்தில், காவல்துறையின் தொடர் சோதனையில், 1538 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமீறல்: குமரியில் 1538 நபர்களுக்கு அபராதம்
X

குமரி மாவட்டம், குளச்சலில் வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் நோய் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அரசின் நடவடிக்கைகளால், தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வருகிறது.

அதே நேரத்தில், பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, விதிமுறைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஈடுபட்டு வருகின்ற்னார்.

இந்தநிலையில் குமரிமாவட்டம் முழுவதும் 48 சோதனை சாவடிகளை அமைந்துள்ள போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் நடத்திய வாகனச்சோதனையில், முகக்கவசம் அணியாமல் வந்த 1512 நபர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்த 26 நபர்கள் என மொத்தம் 1538 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2021 8:17 AM GMT

Related News