/* */

சூறைக்காற்றுடன் கனமழை: சீற்றத்தால் கடலுக்கு செல்வதை தவிர்த்த மீனவர்கள்

குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக தொழிலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்தனர்.

HIGHLIGHTS

சூறைக்காற்றுடன் கனமழை: சீற்றத்தால் கடலுக்கு செல்வதை தவிர்த்த மீனவர்கள்
X

சீற்றத்தால், கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

தமிழகத்தில், தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் அதன் ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் கேரளா லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியுலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று மாலை முதல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கடற்கரை பகுதியான குளச்சல், முட்டம், மண்டைக்காடு, சுற்றுவட்டார கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததோடு, கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் குளச்சல், முட்டம், மண்டைக்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம், மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Updated On: 27 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  3. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  4. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  5. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  6. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  7. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  8. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  10. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...