/* */

கேரள அரசு ஆக்கிரமித்த கண்ணகி கோவில்; மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை

தமிழக கேரள எல்லையில், தமிழக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கண்ணகி கோவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

HIGHLIGHTS

கேரள அரசு ஆக்கிரமித்த கண்ணகி கோவில்; மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை
X

கேரள அரசு கைவசப்படுத்திய கண்ணகி கோவிலை, மீட்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை ( படம் - கண்ணகி கோவில்)

சிலப்பதிகார நாயகி கண்ணகி, தவறான நீதி வழங்கி தனது கணவனை கொன்ற மதுரை மன்னனுடன் மோதி, மதுரை மாநகரை தீக்கிரையாக்கிய பின்னர், மலைப்பாதை வழியாக நடந்து வந்து அமைதி கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது கண்ணகி கோவில். கோவில் அமைந்துள்ள வனப்பகுதி தமிழகத்தின் மேகமலை புலிகள் சரணாலயமும், கேரளத்தின் இடுக்கி புலிகள் காப்பகமும் இணையும் இடத்தில் உள்ளது. வியக்க வைக்கும் அடர்ந்த இந்த வனப்பகுதி. கொள்ளை அழகு கொண்டது.

தமிழக, கேரள எல்லை பிரிவினையின் போது, இந்த வனப்பகுதி தமிழக எல்லைக்குள் வந்தது. ஆனால் அடர்ந்த வனத்திற்குள் இருந்ததால், தமிழகத்தில் இருந்து கோவிலுக்கு ரோடு அமைக்க முடியவில்லை. ஆனாலும் கருணாநிதி முதல்வராக இருந்த போது, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த சூழலில் தி.மு.க., அரசு கலைக்கப்பட்டது. இதனால் அந்த முயற்சி பாதியில் நின்று போனது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட கேரள அரசு, தனது வனப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு பாதை அமைத்தது. அதாவது ஜீப் போன்ற கனரக வாகனங்கள் மட்டும் செல்லும் அளவுக்கு, தந்திரமாக பாதை அமைத்தது. தனது பாதையின் வழியாக சென்று கண்ணகியை தமிழக பக்தர்கள் வழிபட வேண்டுமென்றால், கேரள பக்தர்களும் வருவார்கள் என ஒரு நிபந்தனையுடன் தனது செயல் திட்டத்தை தொடங்கியது.

இப்போது தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய பிரச்னை. கேரள அதிகாரிகளை கண்டால், தமிழக அதிகாரிகளுக்கு என்னவோ உதறல் எடுத்து விடும். சம கேடரில் இருக்கும் அதிகாரிகள் கூட கேரள அதிகாரிகளை தனது 'பிக்பாஸ்' போல் நினைத்து பம்முவது தான் இந்த விஷயத்தில் வேதனையின் உச்சம். இந்த பலவீனத்தை பயன்படுத்தி கேரள அரசு பெரியாறு அணையிலும், கண்ணகி கோவிலிலும் செய்து வரும் அடாவடி சொல்லி மாளாது. இதற்கு முக்கிய காரணம் தமிழக அதிகாரிகளின் இயலாமை என்பது தேனி மாவட்டத்தில் வாழும் அத்தனை பேருக்கும் தெரிந்த உண்மை.

இந்த சூழலில், 'டிஜிட்டல் சர்வே' என்ற பெயரில், கேரளா ஒரு நாடகத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் எக்டேர் தமிழக வனப்பகுதிகளை கேரளா அபகரிக்கப்போகிறது. இதில் கண்ணகி கோவிலும் கேரள எல்லைக்குள் போகப்போகிறது என தமிழக விவசாயிகள், குறிப்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கதறி வருகிறது.

பலமுறை தமிழக அரசு உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கூட நேரடியாக சந்தித்து நிலைமையை விளக்கியும், தமிழக அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் இல்லை என இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் பகிரங்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆறுதல் தரும் ஒரு விஷயம் நடந்தேறி உள்ளது. கண்ணகி கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட உள்ளது என தேனி இணை ஆணையர் மூலம் முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு, ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில், நேற்று கண்ணகி கோவிலுக்கு தமிழகத்தின் வழியாக செல்லும் பளியங்குடி மற்றும் தெல்லுகுடி பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதோடு, கோவிலுக்கு என்று தனி ஆணையரையும் அரசு நியமிக்க வேண்டும். மாதாந்திர பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். குமுளியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு வரும் பாதையை, தமிழக கண்ணகி பக்தர்கள் தவிர்க்க வேண்டும். கண்ணகி கோவில், தமிழக எல்லைக்குள் தான் இருக்கிறது என்கிற உறுதியான நிலைப்பாட்டை தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும். 1976 ம் ஆண்டு உத்தமபாளையம் சர்வே துறையால் வரைவீடு செய்யப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில், தமிழக கேரள எல்லையை பிரித்து கம்பி வேலி போட வேண்டும்.

கண்ணகிக்காக மட்டுமே செங்குட்டுவனால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டிடத்தில், இடைச்செருகலாக வைக்கப்பட்ட விக்கிரகங்கள் கேரள எல்லைக்குள் வழிபாட்டிற்கு வைக்கப்பட வேண்டும். கண்ணகி கோவிலுக்கென்று இருக்கும் ஆகமத்தை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி காட்டவேண்டும்.

கண்ணகி கோட்டம் தொடர்பான உரிய விளக்கத்தை கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்கு கொடுப்பதோடு, அங்கு சென்று வழக்கு தொடுத்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வர வேண்டும். கேரள மாநில முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட மங்கலதேவி கண்ணகி கோவில் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, கோவிலின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

சித்ரா பவுர்ணமி திருவிழா தொடர்பாக ஆண்டுதோறும் நடக்கும் இரு மாநில அதிகாரிகளின் கூட்டுக் கூட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை முற்றாகத் தவிர்க்க வேண்டும். கேரள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கண்ணகி கோட்டம், உடனடியாக தமிழக தொல்லியல் துறை திருச்சி வட்டத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை யின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும்.

வரும் சித்ரா பவுர்ணமிக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்ணகி கோட்டத்திற்கு வந்து வழிபாடு நடத்த வேண்டும். டிஜிட்டல் ரீ சர்வே மோசடி கும்பலை கண்ணகி கோட்டத்திலிருந்து 33 மீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்க வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

Updated On: 9 Dec 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்