/* */

கோவில் இடம் தொடர்பாக காஞ்சிபுரம் வருவாய் அதிகாரியிடம் கிராம மக்கள் புகார்

கோவில் இடம் பிரச்சினை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவில் இடம் தொடர்பாக காஞ்சிபுரம் வருவாய் அதிகாரியிடம் கிராம மக்கள் புகார்
X

கோவில் இடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த திம்மையம்பேட்டை பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் வாலாஜாபாத் அடுத்த திம்மையம்பேட்டை பகுதி சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

அம்மனுவில் , வாலாஜாபாத் வட்டம் , திம்மையன்பேட்டை கிராம பொதுமக்களாகிய நாங்கள் வீட்டுவரி, குழாய்வரி மற்றும் வருவாய் துறையினரால் வழங்கப்படும் பட்டா உள்ளிட்டவைகளை உரிய முறையில் பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், திம்மையன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோயில்களுக்கு சொந்தமான நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் பட்டியலை இத்திருக்கோயில்களின் தக்கார் .ப.மலைவாசன் , வாலாஜாபாத் சார் பதிவாளருக்கு அனுப்பியுள்ள 13.10.2020 நாளிட்ட கடிதத்தில் , குறிப்பிட்டுள்ள 15 சர்வே எண்களில் ஆவணப்பதிவு ஏதும் வந்தால் அதனை பதிவு செய்யாமல் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் வரிசை எண் 15-ல் சர்வே எண் 40/5 (தற்போது 40/2) கொண்ட சர்வே எண்ணில் 0.39 ஹ/ஏர் அளவு கொண்ட நிலமும் பதிவு செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்கண்ட தக்காரின் கடிதத்தில் வரிசை எண் 15-ல் சர்வே எண் 40/5-ல் என்பதை மட்டும் குறிப்பிடாமல் தற்போது 40/2 என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்.

தக்கார் தவறாக இணைத்து அனுப்பியதாலும், மேற்கண்ட 0.39 ஹ/ஏர் அளவு கொண்ட நிலம் எங்கு உள்ளது என சரியான தகவல் (வரைபடம்) அளிக்காததாலும், சார் பதிவாளர், வாலாஜாபாத் சர்வே எண், 40/2 கொண்ட அனைத்து இடங்களின் பத்திர பதிலையும் நிறுத்தி வைத்துள்ளார்.

திம்மையன்பேட்டை கிராமத்தின் பிரதான தொழில் நெசவுத்தொழில் ஆகும். உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றால் நெசவாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொல்லொணாத்துயரம் அனுபவித்து வந்தனர்.

தற்பொழுது தங்கள் இடத்தினை அடமானம் வைத்து பிள்ளைகளின் திருமணம் மற்றும் தொழிலை பெருக்குவதற்காகவும், வங்கிக்கடன் மூலம் வீடுகட்டவும் முயற்சி எடுத்தவர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

இதனால், திம்மையன்பேட்டை கிராம பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கண்ட நிலப் பிரச்சனையை தீர்க்குமாறுகாஞ்சிபுரம் உதவி ஆணையர், இந்து அறநிலையத்துறைக்கு கிராம பொதுமக்களின் சார்பாக 21.09.2022 நாளிட்ட கடிதம் அளிக்கப்பட்டது.

உதவி ஆணையர் விரைவில் இப்பிரச்சிளை தீர்க்கப்படும் என உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் கடந்த 10.10.2022 அன்று இது குறித்த மனு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் இதுவரை சரியான விளக்கம் தரப்படவில்லை. எனவே இந்த மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Oct 2022 1:39 PM GMT

Related News