/* */

மனு அளித்த கிராம மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்த ஆர்ப்பாக்கம் மக்களுக்கு ஆரம்பசுகாதார நிலையம் அமைகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

மனு அளித்த  கிராம மக்களுக்கு  ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது
X

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்  மனு அளித்த ஆர்ப்பாக்கம் கிராம மக்களுக்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் பழுதானதால் மூடப்பட்டது.

இக்கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மதுராந்தகத்தில் ஸ்டாலினிடம் கிராம் மக்கள் சார்பில் பிரசாந்த் என்பவர் மனு அளித்தார்.

இதை கருத்தில் கொண்டு இதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதன் அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கு அனுமதி அளித்து அதை செயல்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் பழைய கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான பூஜை வெள்ளியன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையம் செயல்பட ஆரம்பித்தால் அப்பகுதி மக்கள் அவசர மற்றும் முதலுதவி சிகிச்சைகளுக்கும் சுமார் 15 கி.மீ தொலவில் உள்ள காஞ்சிபுரம் அல்லது உத்திரமேரூர் மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டியதில்லை.

மேலும் சுற்றியுள்ள கிராமங்களான மாகறல், வாயலூர், காவாந்தண்டலம், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த சுருட்டல், மேனல்லூர் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவம் பெற முடியும்.

இந்த அறிவிப்பு ஆக்கிராம மக்களிடையே பெரிய மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மனு அளித்த மூன்று மாதத்திலேயே அதற்கான விடியல் கிடைத்தது உள்ளது என்று மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 18 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  3. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  4. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  5. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  6. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  8. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  9. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்