/* */

ரூ 10 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கல்

welfare assistance Presented by Minister Anparasan

HIGHLIGHTS

ரூ 10 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கல்
X

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக அமைச்சர் தா.மோ அன்பரசன் 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த 22.12.2021 அன்று இதே இடத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றதில், வருவாய் துறையின் சார்பில் 432 மனுக்களும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 510 மனுக்களும் பிற துறைகளின் சார்பில் 253 மனுக்களும் என மொத்தம் 1195 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் இன்றைய தினம் 312 பயனாளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைகள், 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 165 பயனாளிகளுக்கு ரூ.18.69 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் நிவாரண உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகை, குடிசை மாற்று வாரியம் சார்பில் 116 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி, வட்டார வளர்ச்சித் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.14.70 இலட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில் காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவி மற்றும் இலவச செல்போன், 7 பயனாளிகளுக்கு ரூ.32.34 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர் குடியிருப்புகள் என மொத்தம் 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நமது முதல்வர் நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு எனது லட்சியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர். இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17, 202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22,251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தள்ளுபடி செய்துள்ளார்.

இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்) திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், துணைத்தலைவர் நித்யா சுகுமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் திரு.சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 25 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  6. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  9. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  10. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?