/* */

காஞ்சிபுரம்: அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் மளிகை பொருட்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 14 வகையான மளிகை பொருட்கள் அனைத்தும் நியாயவிலைக் கடைகளிலும் தயார் நிலையில் உள்ளன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: அரிசி அட்டைதாரர்களுக்கு  வழங்க தயார் நிலையில் மளிகை பொருட்கள்!
X

காஞ்சிபுரத்தில் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு வழங்க தயாராக உள்ள 14 வகை மளிகை பொருட்கள்.

தமிழகத்தின் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என பல கட்டங்களில் அமல்படுத்தபட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையை போக்க தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் அதனுடன் சர்க்கரை, கோதுமை மாவு , ரவை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , உப்பு , டீ தூள் , கடுகு , சீரகம் , மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் என 14 வகையான மளிகைப் பொருட்களும் அடங்கிய தொகுப்பு பைகள் கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வருகிற 15ம் தேதி முதல் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க அதற்கான டோக்கன்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுகள்தோறும் சென்று அளித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரன மளிகை பொருட்கள் அனைத்தும் அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு அது குறித்த தகவல்கள் அந்த டோ கண்களில் இடம்பெற்றுள்ளது.

மேலும் பொருட்கள் வழங்கப்படும் பைகளில் அரசு முத்திரை மற்றும் நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம் தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம் எனும் வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Updated On: 13 Jun 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்