/* */

காஞ்சிபுரம் பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் தீப்பற்றி எரிந்தது: மக்கள் கடும் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில், பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் தீப்பற்றி எரிந்தது: மக்கள் கடும் அதிர்ச்சி
X

காஞ்சிபுரம் பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள். (உள்படம்) எலும்புக்கூடு போல ஆன ஆம்னி கார்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலையில் வசிப்பவர் மோகன். பூக்கடை சத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரி மோகன் தனது வியாபாரத்திற்காக ஆம்னி கார் வைத்திருந்த நிலையில் தினம் தோறும் வீட்டின் முன் புறத்தில் காரை நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த ஓரு வார காலமாக ஆம்னி காரை வெளியே எடுக்காத நிலையில்,நேற்று இரவு நேரத்தில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. கார் தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்னி காரில் மளமளவென பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் ஆம்னி கார் முற்றிலுமாக எரிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு எலும்புக்கூடாக மாறி பரிதாபமாக காட்சி அளித்தது. இதையடுத்து, மர்மமான முறையில் கார் தீப்பற்றி எரிந்தது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Updated On: 4 July 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்