/* */

கணவர் செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

Latest Suicide News -கணவரிடம் செல்போன் கேட்டு வாங்கி தர மறுத்ததால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கணவர் செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

சரஸ்வதி

Latest Suicide News -ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கி தராததால் மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பலருக்கு ஏற்றத்தையும்‌, பலருக்கு ஏற்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது செல்போன். இதில் குழந்தைகள் , இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்கள் பலர் அதில் மூழ்கி குடும்ப வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

பல குடும்பங்களில் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்கள் உயிரினை இழந்து குடும்பத்தை மீளா துயரில் ஆழ்த்கின்றனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். முருகன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி வ/26. இவர்களுக்கு ஐந்து வயது ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே தாலிட்டு இருந்துள்ளது. கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது சரஸ்வதி மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் பிரதேசத்தை கைப்பற்றி இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கணவரிடம் செல்போன் கேட்டு வாங்கி தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே செல்போனை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தந்தை கண்டித்ததை தாங்க முடியாமல் சிறுவன் தூக்கில் கொண்ட சம்பவத்தில் , மகன் உயிரிழப்புக்கு தான் காரணம் என கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தந்தையும் அதே தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள் இதன் அருகிலேயே இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.

பலர் செல்போனில் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சாதனைகள் செய்து வரும் நிலையில் சிறுவர்கள் இளைஞர்கள் இவர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பணத்தை இழந்து வரும் நிலையில் , தமிழக கவர்னர் நேற்று இதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் , அதனை அரசியல் கட்சியினர் வரவேற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு