/* */

கூகுள் பே தொழில்நுட்பம் மூலம் கஞ்சா விற்பனை: வடமாநில வாலிபர் இருவர்‌ கைது

ஸ்ரீபெரும்புதூர் ஒட்டி கல்லூரிகள், தொழிற்சாலை, கட்டுமான நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

கூகுள் பே தொழில்நுட்பம் மூலம் கஞ்சா விற்பனை: வடமாநில வாலிபர் இருவர்‌ கைது
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பேருந்து நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள்.

தமிழகத்தில் போதைப் பொருட்களால் பெரும் சீரழிவு ஏற்படுவதாக பெரும் குற்றம்சாட்டை கடந்த ஆறு மாதங்களாக சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் கூற தொடங்கி மெல்ல மெல்ல உருவெடுத்து தற்போது அதி தீவிரமடைந்துள்ளது.

பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரின் செய்கை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் , பெற்றோர்களுக்கு அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவர் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் இது குறித்து கடுமையாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.

அதே வேலையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில், போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் குற்றங்களில் ஈடுபடுவது கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளார்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கஞ்சா விற்பனை செய்து வரும் வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் மூலமாக கஞ்சா தமிழகத்தில் ஊடுருவதாக வந்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் இரு வட மாநில இளைஞர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.கிலோ 150 கிராம் உலர்நிலை கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சார்ந்த மானஸ்ரூட் மற்றும் பீகாரை சேர்ந்த பப்புகுமார் என தெரிய வந்து அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்ததில் அவர்கள் அளித்த பதில் காவல்துறையே அதிர வைத்தது.கூகுள் பே வழியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளிலுள்ள கல்லூரி மாணவர்கள் , தொழிலாளர்களை வாடிக்கையாளராக்கி சுமார் 300 பேருக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.மத்திய மாநில அரசுகள் போதை தடுப்பு விழிப்புணர்வுகள் பல வகைகள் ஏற்படுத்தினாலும் மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகியுள்ளது.


Updated On: 13 Aug 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி