/* */

பள்ளி மாணவியை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம்: மிரட்டல் சாமியார் சிக்கினார்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி மாணவியை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பள்ளி மாணவியை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம்: மிரட்டல் சாமியார் சிக்கினார்..!
X

தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல். (கோப்பு படம்)

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் , பழைய சீவரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு ஒரு மனைவியும் , இரு சிறு வயது குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமானுஜபுரத்தில் உள்ள பாட்டி ஊரில் குடியேறி கருப்பண்ணசாமி கோயில் அமைத்து பக்தர்களுக்கு குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் வசித்து வரும் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மயக்கி தன்வசப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்தப் பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனக்கு அனுப்ப வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் மிரட்டல் அதிகரித்ததால் பயந்து போன மாணவி, தன் பெற்றோரிடம் சாமியார் அத்துமீறல் குறித்து கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கைது செய்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி, அவரை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம், இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை ஆசிரமத்திற்கு அழைத்து சென்று முனுசாமி என்ற சாமியாரிடம் பூஜை செய்ய வைத்துள்ளனர். இதன்பின்னர், ஆசிரமத்தில் பூஜைக்கு சென்ற அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாமியாரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காஞ்சிபுரத்திலும் சாமியாரை பாலியல் வழக்கில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Jun 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்