/* */

மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி

Today Kanchipuram News -மழைநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளும் போது எச்சரிக்கை மற்றும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்திய நிலையில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி
X

மாங்காடு அருகே மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதில் தவறி விழுந்து பலியான லட்சுமிபதி.

Today Kanchipuram News -மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி ..போதிய பாதுகாப்பு வசதிகள், எச்சரிக்கை பலகை இல்லாததால் நேர்ந்த விபரீதம் பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அதில் ஒருவர் முகம் குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து போனவர் மாங்காடு பாலான்டேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமிபதி(42), தனியார் கல்லூரியில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பனி செய்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இன்று காலை வேலைக்கு சென்றவர் நிலை தடுமாறி கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்தவர் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழை நீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏதும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா? யாராவது தள்ளி விட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த நபர் மழை நீர் கால்வாயில் விழுந்து இறந்த சம்பவத்திற்கு பிறகு நகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் ஓரங்களில் கம்புகள் நட்டு தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதமாகவே தமிழக முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகள் போது பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை பலகை மற்றும் பாதுகாப்பு வளையங்கள் வைக்கப்பட வேண்டும் என எச்சரித்து நிலையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...