/* */

அம்பேத்கர் பிறந்த தினம்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாநகர அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அம்பேத்கர் பிறந்த தினம்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகள்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் ஒட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட வழங்கும் நிகழ்ச்சியின் போது.

இந்தியாவின் சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கரின் 123 வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் காலை முதல் சிறப்பாக அவரது திருவுருவ சிலை மற்றும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து நல திட்ட உதவிகள் மற்றும் மரியாதைகள் செய்யப்பட்டது.

மேலும் அவரின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சமத்துவ நாளாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டதின் பேரில் நேற்று அனைத்து அரசு அலுவலகங்களையும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் புரட்சி பாரதம் விஜய் மக்கள் இயக்கம் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் நகரில் பேரணியாக சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி பொது மக்களுக்கு மோர் பழரசங்கள் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி பழங்கள் மற்றும் சாம்பார் சாதம் தயிர் சாதம் உள்ளிட்டவைகளும் அன்னதானங்களாக வழங்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகரில் இயங்கும் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் சங்க சிறப்பு தலைவரான காஞ்சி டிவி மதியழகன் சட்ட ஆலோசகர் தாடி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தில் உறுப்பினராக உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பில் அம்பேத்கரின் ஆளுயர திருவுருவப்படத்தினையும் சிறப்பு விருந்தினர்கள் திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே அன்னதானங்களும் குளிர்பானங்களும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர்கள் எழிலரசன் சங்கப் பொருளாளர் மதன் துணைத் தலைவர்கள் உமாபதி பழனி மற்றும் சங்கத் துணைச் செயலாளர் நாராயணன் , திமுகவை சேர்ந்த நாத்திகம் நாகராஜன், காங்கிரஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள், தென்னேரி‌ சுகுமார் உள்ளிட்ட ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  9. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  10. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்