/* */

காஞ்சிபுரத்தில் ரூ 1.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 1.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ரூ 1.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
X

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்.

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1,30,400/- (ரூபாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.68,400/- மதிப்பிலான 10 மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம், ரெஹோபோத் மற்றும் பத்மா சுப்ரமணியம் என்ற இரு மனவளர்ச்சிக்குன்றிய சிறப்புப் பள்ளிகளுக்கு ரூ.50,000/- மதிப்புள்ள மனவளர்ச்சிக்குன்றிய சிறார்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்கான 2 AVAZ சாதனத்தையும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ. 12,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2023 1:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  6. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  7. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  9. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  10. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...