/* */

வாலாஜாபாத் : போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைப்பு

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்மேன், துணை சேர்மேன் தேர்தலில் வாக்களிக்க போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாலாஜாபாத் : போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைப்பு
X

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில் 21 பேர் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தரப்பில் 15 பேரும், காங்கிரஸ் தரப்பில் ஒருவரும், அதிமுக சார்பில் இரண்டு பேரும், சுயேச்சைகள் இரண்டு பேரும், பாமகவை சேர்ந்த ஒருவரும் என வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சஞ்சய் காந்தி என்பவரும் தேவேந்திரன் என்பவரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றிய குழுத் தலைவருக்கு இருதரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து அறிந்து உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க. சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய குழு அலுவலகத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் 2 மணி வரை நடை பெறாமல் இருந்தது இதனிடையே தேவேந்திரன் தரப்பு ஆதரவாளர்கள் ஒன்றிய குழு அலுவலகம் எதிரே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை நடத்தக் கோரி கோஷமிட்டனர்.

இதன் காரணமாக வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமரசம் ஏற்படாததால் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட காலத்தில் போதிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தலை ஒத்தி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்