/* */

காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சத்தில் பல்வேறு புதிய பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய ரேஷன் கடை , தார்சாலை அமைக்கும் பணி மற்றும் காரியமண்டபம் , பள்ளி மாணவர்களுக்கு மேஜை வழங்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சத்தில் பல்வேறு புதிய பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி ஊராட்சியில் ரூ.15.25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய நியாய விலை கடைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பணிகளை துவக்கி வைத்தும் , பணி நிறைவுற்ற கட்டிடத்தை திறந்து வைத்தும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேசைகள் என ரூ.59 லட்சம் மதிப்பில் வழங்கினார்.

காஞ்சிபுரம் புத்தேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருபருத்திகுன்றம் ஊராட்சி குளக்கரை பகுதியில் ரூபாய் 6.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காரியம் மண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அதே பகுதியில் புதிய கால்வாய் கல்வெட்டு ரூபாய் 6.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மேல்ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 3.75 லட்சம் மதிப்பிலான மேசை நாற்காலிகளை வழங்கினார்.

திருப்புகுழி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மற்றும் லட்சம் என 17 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணியினையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

இதேபோல் ஓழுக்கோல்பட்டு பகுதியில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் , ஒன்றிய குழு துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது, குழு உறுப்பினர்கள் ரேகா ஸ்டாலின், திருப்பருத்திகுன்றம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்ராமச்சந்திரன் , பி எம் நீலகண்டன் , தெரு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் அப்பன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சீனிவாசன், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...