/* */

வைகுண்ட ஏகாதசி தரிசனம் : அமைச்சர் ஓகே.. கலெக்டர் நோ.. குழப்பத்தில் பக்தர்கள்..

வைகுண்ட ஏகாதசி பக்தர்களுக்கு அனுமதி என அமைச்சர் அறிவித்த நிலையில் தடை காஞ்சி கலெக்டர் விதித்த தடையால் குழப்பம் .

HIGHLIGHTS

வைகுண்ட ஏகாதசி தரிசனம் :   அமைச்சர் ஓகே.. கலெக்டர்  நோ.. குழப்பத்தில் பக்தர்கள்..
X

பைல் படம்- காஞ்சிபுரம் பெருமாள் கோயில்

காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு புகழ் பெற்ற இரு கோயில்கள் அமைந்துள்ளது. ரங்கசாமி குளம் அருகே அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் திருக்கோயில் ஆகும்.

தற்போது கொரோனா பரவல் தடை காரணமாக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிப்பதாகவும் இணையதளம் வழியாக தரிசித்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதித்தார்.

மற்றொரு கோயிலான அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெறுவதன் காரணமாக இந்த வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற வாய்ப்பில்லை. இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வைகுண்ட ஏகாதசி அன்று பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

இதனால் காஞ்சிபுரம் பக்தர்கள் வைகுண்ட பெருமாள் சந்திக்கலாம் என ஆவலாக இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் மேற்கொள்ள அதிக அளவில் பொது மக்கள் வரக்கூடும் என்பதால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கண்டிப்புடன் கூறி தரிசனத்துக்கு தடை விதித்துள்ளார். இதனால் பக்தர்கள் அமைச்சர் ஓகே.. என கூறியதும், மாவட்ட ஆட்சியர் நோ..எனக் கூறுயுள்ளது பக்தர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்மீக குழுக்கள் வைகுண்ட ஏகாதேசி அன்று எம்பெருமானை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஒருமுறை ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். போகி பண்டிகை மக்கள் கொண்டாடிய பின் பொங்கலுக்கு புதுத்துணி மற்றும் பொங்கலுக்கான காய்கறிகள் என அதிக அளவில் நகருக்கு கிராமங்கள் வருவர்.இதனால் பரவல் பாதிப்பு அதிகரிக்க கூடும் வாய்ப்பு உள்ள நிலை உருவாகும் என்பதால் தடை விதிக்கப்படலாம் என ஒரு அரசு அதிகாரிகள் தரப்பினர் தெரிவிக்கின்றனர்..

Updated On: 13 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்