/* */

நள்ளிரவில் சிறப்பு காட்சி:எப்படி வந்தது துணிவு?. காரணம் வாரிசா ?

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு டிக்கெட் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நள்ளிரவில் சிறப்பு காட்சி:எப்படி வந்தது துணிவு?. காரணம் வாரிசா ?
X

காஞ்சிபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகளுடன் திரைக்கு வரும் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் என்றாலே பொதுமக்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி தான்.

விவசாயி தான் விதைத்த நெல்லை அறுவடை செய்து பொங்கலன்று புது பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கும் மறுநாள் தனக்கு வாழ்நாள் முழுவதும் உதவும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது என மகிழ்ச்சி கொள்ளும் விவசாயிகள்..

பொங்கல் என்றாலே புத்தாண்டுகள் கிடைக்கும், பள்ளி கால நண்பர்களே சந்திப்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இளைஞர்களுக்கும் கொண்டாட்டமே..

இந்நிலையில் திரை உலகத்தினருக்கோ இளைஞர்களின் மன ஓட்டத்தை கண்டு அதற்கேற்றார் போல் பிரபல திரை நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து , அதில் அதிக லாபம் ஈட்டுவதும் மட்டுமே அவர்களின் குறிக்கோள்.

இளைஞர்களுக்ளோ தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாவதில் யார் முன்னணி என்றதில் தலையா .. தளபதியா.. என இணையதளம் முதல் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆவது வரை மாபெரும் போட்டி கொண்டாட்டங்களே முக்கியம்..

இந்த நிலையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் நாளை வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டிக்கெட்டுகளை பெறுவதில் ரசிகர்கள் பெரும் வெறியுடன் சுற்றி வருகின்றனர். ஆனால் தியேட்டர்களும் ரசிகர் மன்றங்களுக்கு சிறப்பு காட்சி என்ற அடிப்படையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பன்மடங்கு கட்டணத்தை ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி வசூலித்துக் கொள்கின்றனர்..

தமிழ்நாடு சினிமா விதிகளின்படி ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் காட்சிகளை வெளியிடுவதற்கு சட்டத்திலே இடமில்லை என நுகர்வோர் அமைப்பினர் சுட்டிக்காட்டிய நிலையில் , தமிழக அரசு இதற்கு எவ்வாறு சிறப்பு அனுமதி அளிக்கிறது?

மேலும் காட்சிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு துவங்குவதும், ஒரே இடத்தில் இரு ரசிகர்களின் படங்களும் வெளியாவதும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கூடும்.

இதனை கையாள்வது காவல்துறைக்கு சற்று கடினமான வேலையே ஆகும். முழுக்க முழுக்க இளைஞர்களின் கூட்டம் அங்கு இருப்பதால் இதனை நெறிப்படுத்த இயலுமா என்பது கேள்விக்குறியே..

இந்த சினிமா டிக்கெட் விலை 1500 இல் இருந்து ஆரம்பித்து 2000 வரை செல்கிறது. இதற்காக செலவிடப்படும் தொகை இளைஞர்கள் கையில் வருவதற்கு அவரது பெற்றோர்கள் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் அல்லது இவர்கள் பணிபுரிவராக இருந்தால் எவ்வளவு மணி நேரம் இதற்காக செலவிடப்பட்டு இருக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்து சிறு சந்தோஷத்திற்காக தங்களை திரை உலகத்திற்கு அடிமைப்படுத்துவதாக என்ற கேள்வியும் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுர மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் கண்ணன் சார்பில் எஸ்.பி. மற்றும் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில்‌,

வரும் 2023-ஆம் ஆண்டு தமிழ் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் மாபெரும் இரண்டு சினிமா துறையைச் சார்ந்த திரை பிரபலமான ( அஜித் மற்றும் விஜய்) ஆகிய இருவரின் திரைப்படங்களும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் திரையிடப்படு இருக்கிறது.

இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் தமிழ் திரையுலகின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணங்களை வானலாவி உயர்த்தி ரசிகர்களை ஏமாற்றும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் செயல்படுவது சட்டவிரோதம் ஆனது.

மேலும் குறிப்பிட்ட நாளில் வரும் 11/01/2023 அன்று திரையிடப்படும் இரண்டு திரைப்படங்களும் சுமார் 500 முதல் 5000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மற்றும் ரசிகர் பெருமக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயலில் திரையரங்க உரிமையாளர்கள் செயல்பட்டு திரைப்படத்தை வெளியிடுகின்றனர்.

மேலும் இரண்டு திரைப்படங்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட்ஜன்ட் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு ஆளும் கட்சி அமைச்சரின் நிறுவனத்தின் மூலம் வெளிப்படையாக மக்கள் வரிப்பணத்தை ஏமாற்று விதத்தில் சுரண்டுவது இந்திய அரசியல் சட்டத்தின் படி தண்டிக்கக் கூடிய குற்றமாகும்.

எனவே மேற்படி திரைப்படத்திற்கு உரிய கட்டணம் நிர்ணயிக்கும் வரை மேற்படி திரைப்படத்தை காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திரைப்பட திரையரங்கு உரிமையாளர்களும் வெளியிடக்கூடாது என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முடிவெடுத்து காஞ்சிபுரத்தில் திரையரங்கம் முன்பாக வரும் 11/01/2023 அன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதாக முடிவு எடுத்துள்ளோம்.

எனவே மேற்படி போராட்டத்திற்கு ரசிகர்களின் பேராதரோடும் தமிழக மக்களின் நன்மதிப்போடும் செயல்படும் எங்களுக்கு தாங்கள் சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி வந்தது துணிவு ? இதற்குக் காரணம் வாரிசா ? பல முணுமுணுத்தவாரே செல்வது நம் காதுக்கு கேட்கிறது .

Updated On: 10 Jan 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  2. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  3. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  4. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  5. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  8. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  9. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  10. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?