/* */

பள்ளி‌ காலை உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர்

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பள்ளி‌ காலை உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர்
X

தமிழக அரசு சார்பில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவினை சுவைத்து அதன் தரத்தின் ஆய்வு செய்த காஞ்சி மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர்.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர்.

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலம் துவங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் சுப்பிரமணியன் , மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முதலாவதாக துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு முழு சுகாதாரம் உறுதி செய்து, தரமான உணவு தயாரிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கைலாசநாதர் கோயில் துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும் போது அவர்களுடன் உரையாடி உணவு தரம், சுவை குறித்து கேட்டறிந்தார்.

அதனையடுத்து புதுப்பாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் குறித்து கூறச் சொல்லி ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அரசு நகர் பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய் தூர் வாரிய பணிகளை ஆய்வு மேற்கொண்டு, அதன்பின் புதிய காய்கறி சந்தை கட்டும் பணி துவங்க உள்ள நிலையில், தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை ஆணையர் கணேசனுக்கு அளித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி, பொறியாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Sep 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...