மத சின்னங்களை அணிந்திருந்த மாணவர்களை தாக்கிய ஆசிரியர்: முதல்வரின் தனிபிரிவில் புகார்

காஞ்சிபுரம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் மத சின்னங்களை அணிந்திருந்த மாணவர்களை துன்புறுத்தியதாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மத சின்னங்களை அணிந்திருந்த மாணவர்களை தாக்கிய ஆசிரியர்: முதல்வரின் தனிபிரிவில் புகார்
X

ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது பழம்பெரும் ஆந்திரசன் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி. இப் பள்ளி ஒழுக்கம் , படிப்பில் சிறந்து விளங்குவதால் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சின்னையன்குளம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் ஆகியோர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிருபாகரன் என்ற மாணவன் கழுத்தில் அணிந்த ருத்ராட்சம் மணியை பள்ளி வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் என்பவர் அகற்றச் சொல்லி பள்ளி மாணவர்கள் முன்பு அடித்தும் பிற மாணவர்களை கொண்டு குட்ட சொல்லியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கிருபாகரன் பள்ளி செல்ல விரும்பாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதேபோல் கிருபானந்தம் என்ற மாணவனையும் ஜாய்சன் மத நோக்கில் துன்புறுத்தியதால் இவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இரு பெற்றோர்களும் பள்ளி சென்று வகுப்பு ஆசிரியரை சந்தித்தபோது தரக்குறைவாக நடத்தியதால் தலைமை ஆசிரியரை சந்திக்க அனுமதி கேட்டும் மறுத்து அனுப்பிவிட்டனர். இதனால் பெற்றோர்கள் சார்பில் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டிபடி மாணவர்கள் சிகை அலங்காரம் , கைப்பட்டை அணிதல் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறிவரும் நிலையில் இது குறித்து மாணவர்கள் ஈடுபட்டால் பெற்றோர்களை அழைத்து தெரிவிக்காது பள்ளி மாணவர்களின் தாங்களே தண்டித்த ஆசிரியரின் அத்து மீறிய செயலாக உள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இச்சம்பவத்தில் முறையான நடவடிக்கை ஆசிரியர் மீது எடுத்து அனைவரும் சமம் என்பதை பள்ளியில் செயல்படுத்தாமல் இருக்கும் ஆசிரியரை இடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வருங்காலங்களில் இதுபோன்ற மத ரீதியான துன்புறுத்தல்கள் இருக்கக்கூடாது எனவும் பள்ளிக்கு கோரிக்கை விடுகின்றனர்

Updated On: 14 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...
 2. சென்னை
  அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
 3. செங்கம்
  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
 4. தென்காசி
  தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி...
 5. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 6. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 7. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 9. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 10. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு