பொது மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதில் தமிழ்நாடு முன்னிலை - எழிலரசன்

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட முகாம் திருக்காளிமேடு பகுதியில் துவங்கியது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பொது மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதில் தமிழ்நாடு முன்னிலை - எழிலரசன்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற ஒருவருக்கு பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்ட எம்எல்ஏ எழிலரசன்,  மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,  துணை மேயர் குமரகுருநாதன்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காளிமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயர் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் குமரகுருநாதன தலைமையில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சிறப்பு விருந்தினர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

இம்மருத்துவ முகாமில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,இசிஜி பரிசோதனை, ஆரம்ப கால புற்றுநோய் கண்டுபிடிப்பு,மகளிர் காண சிறப்பு சிகிச்சை, இருதய நோய், சிறுநீரக நோய்,எலும்பு காது மூக்கு தொண்டை ,பெண்கள் சிறப்பு,கண் மருத்துவம் குழந்தை நல முகம், காசநோய் மருத்துவம்,புற்றுநோய் என பல்வேறு பிரிவுகளில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் இதில் காஞ்சிபுரம் நகர்ப்புற மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள்,காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று உள்ளனர்.

விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளதால் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் வீடு தேடி கிடைக்கிறது. மக்களை தேடி மருத்துவம் உலகின் தலைசிறந்த திட்டமாக தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

தொடக்க விழா நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகர நகர் நல அலுவலர், மாநகர சுகாதர குழு தலைவர் சங்கர், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட திமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Updated On: 18 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்