/* */

தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆர். தனபாலன் ஆவேச பேச்சு...!

காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு நாடார் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆர். தனபாலன் ஆவேச பேச்சு...!
X

காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு நாடார் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய,பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன். மேடையில் நிர்வாகிகள்.

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள திருமணம் மாளிகையில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரவி நாடார் முன்னிலை வகித்தார் காஞ்சிபுரம் மாவட்ட பேரவை தலைவர் மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநில பொருளாளர் சதாசிவம் பேரவையில் கடந்த ஓராண்டு கால நிகழ்வுகளையும் கடந்து வந்த பாதை மற்றும் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகளை குறித்து பேசினார். இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தீர்மானங்கள் குறித்து பேசிய பேரவைத் தலைவர் என்.ஆர். தனபாலன், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனை பொருட்களை தொழிலாளர்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை அடியோடு ஒழிப்பதுடன் அதற்காக தொலைக்காட்சிகள் மற்றும் கைபேசியில் வரும் விளம்பரங்களை முழுமையாக தடை செய்து சாதாரண மக்களின் உடமைகள், உயிர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிக நேரம் உழைக்கும் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் குறிவைத்து தாக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும் எனவும், பேரவை தலைவர் தனபாலன் பேசினார்.

இதைத்தொடர்ந்து, வாரத்தில் 6 நாள் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை தென்மாவட்ட மக்களின் நலனுக்காக தாம்பரத்தில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை சட்ட வல்லுனர்கள் உதவியுடன் நிறுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். காஞ்சிபுரம் நகரில் கட்டப்பட உள்ள ராஜாஜி சந்தையில் வியாபாரிகளுக்கு முறையாக கடை ஒதுக்க வேண்டும்.

புதிய பேருந்து நிலையம், மஞ்சள் நீர் கால்வாய் சீரமைப்பு செய்து சுகாதாரம் காக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட வேண்டும்.காஞ்சிபுரம் புகழ்பெற்ற பட்டு நெசவு தொழிலுக்கான ஜி.எஸ்.டி வரியை மீண்டும் நான்கு சதவீதத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சேலம் செல்லப்பன், துணை பொதுச்செயலாளர் மதுரை வெற்றி ராஜேஷ் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Updated On: 19 Jun 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  2. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  3. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  4. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  5. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்