தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு

தாமல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
X
திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.

தொண்டை நாட்டில் சரித்திர புகழ் வாய்ந்த புண்ணியத் தலங்களில் சிறந்த காஞ்சி மாநகரின் மேற்கில் அமைந்துள்ளது தாமல் கிராமம்.

இங்கு புகழ்பெற்ற ஸ்ரீ மந்தவெளி மாரி எல்லம்மன் திருக்கோவிலில் மண்டபம் புனரமைக்கப்பட்டு வரும் புதன்கிழமை யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக மருத்துவம் , அத்தியாவசிய பொருட்கள் பெறுதலுக்கு கட்டுப்பாடுகளும் , திருமணம், இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு குறைந்த அளவினர் மட்டுமே அனுமதிக்கப் பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும் இரவு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்த விழாவிற்கு குறைந்த அளவு நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் அனுமதி அளிக்கக் கோரியும் , அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பதாக தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்.


Updated On: 17 Jan 2022 5:55 PM GMT

Related News