/* */

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சுதாகர் பரிசு வழங்கினார்..!

காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் நல்லுறவை பேணும் வகையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி. சுதாகர் பரிசுகளை வழங்கினார்.

HIGHLIGHTS

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சுதாகர் பரிசு வழங்கினார்..!
X

காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசுகள் வழங்குகிறார், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர்.

காவல்துறை பயிற்சிப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி , சிலம்ப வீரர்களுக்கு குழு விளையாட்டுப் போட்டிகள் காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உடல் திறன் பேணிக்காத்தல் அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். மேலும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காவலர் பயிற்சி பள்ளி அலுவலர்கள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?