சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்: கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்:  கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
X

சிங்காடிவாக்கம் ஊராட்சி தலைவர் மீது புகார் அளிக்க போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த ஒப்பந்தகாரர் ரமேஷ்.

காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் தாலுக்கா , சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் விநியோகம் விற்பனையில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒன்றிய கவுன்சிலருடன் இணைந்து அப்பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சென்று தூய்மைப்பணி , இரும்பு கழிவுகள் அகற்றுதல், குடிநீர் விநியோகம் , உணவு விடுதி உள்ளிட்ட ஒப்பந்தங்களை தனக்கு தருமாறு மிரட்டி வருகிறார். தேர்தலில் ரூ 1கோடி செலவு செய்ததாக கூறி வருகிறார்.

மேலும் ஏற்கனவே ஒப்பந்த செய்யப்பட்ட ஊழியர்களையும் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யும் ரமேஷை விநியோகத்தை நிறுத்தும்மாறு என்னை நேரடியாக மிரட்டுவதாகவும் , தவறும் பட்சத்தில் அடியாட்களை கொண்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் , தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி இன்று ரமேஷ் தனைவி மனைவியுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Updated On: 25 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

 1. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 2. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 3. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 4. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
 6. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 7. தர்மபுரி
  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
 8. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 9. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
 10. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை