/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 10 இடங்களில் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் 59 காலி பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் ஐந்து வட்டங்களில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 10 இடங்களில் தேர்வு
X

கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்ற எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டது.

ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04.12.2022 (ஞாயிற்றுக்கிரழமை) அன்று எழுத்துத் தேர்வு கீழ்கண்ட வட்டங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் மூன்று தேர்வு மையங்களும் வாலாஜாபாத் வட்டத்தில் மூன்று தேர்வு மையங்களும் உத்திரமேரூரில் இரண்டு தேர்வு மையங்களும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒரு தேர்வு மையமும் குன்றத்தூர் வட்டம் சார்பாக ஒரு தேர்வு மையங்கள் என 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாக துறை சார்பில் தேர்வு முறை குறித்த அறிவுரைகளும் பத்திரிகை வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்வுக்கு காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் எனவும், தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுது பயிற்சி மூலம் நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பயிற்சி தேர்வுகளை தேர்வு மைய அலுவலர்கள் வாசிக்க தேர்வுகள் பிழையின்றி எழுத வேண்டும்.

தேர்வு மையத்தில் தேர்வு நேரமான ஒரு மணி நேரத்தில் பின்பே தேர்வர்கள் மையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வுகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

கருப்பு மயில் ஆன பால் பாயிண்ட் பேனாவில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு கைபேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்வு மையத்தில் தேர்வுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் , கழிவறை மற்றும் திடீர் மருத்துவ தேவைகளுக்கு சுகாதார மருத்துவர்கள் , செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் வட்டத்தில் சுமார் 2570 தேர்வர்கள் எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் பள்ளி , பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமல்லன் மெட்ரிகுலேஷன் பள்ளி என மூன்று மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பட்டியில் நடைபெற்று வரும் தேர்வு மையத்தினை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையிலான வருவாய்துறை குழுவினர் தேர்வுகளுக்கு தேர்வு அறைகள் குறித்த விவரங்களை வழிகாட்டியும் தேர்வு மையத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து தேர்வு துவங்கியதும் தேர்வு அறைகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் நடைபெறும் தேர்வு மையங்களையும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

Updated On: 4 Dec 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...