/* */

சூற்றுசூழல், யோகா, தற்காப்பு கலை கற்பித்தலில் பள்ளிகள் கவனம்: மத்திய அமைச்சர்

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இரண்டாவது நாளாக காஞ்சிபுரத்தில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சூற்றுசூழல், யோகா, தற்காப்பு  கலை கற்பித்தலில் பள்ளிகள் கவனம்: மத்திய அமைச்சர்
X

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தில் பயின்ற மாணவிகளுடன் கலந்துரையாடிய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங்

கல்வி கற்க மாணவர்களுக்கு நல்லதொரு சூற்றுசூழல் ஏற்படுத்துதல், யோகா, தற்காப்பு கலை ஆகியவற்றை கற்பித்தலிலை பள்ளிகள் கவனம் கொள்ள வேண்டும்‌ என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்தில் செயல்படும் அரசு பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இரு நாள் அரசு பயணமாக ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வருகை புரிந்தார். முதல் நாள் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் சி பி எஸ் சி பள்ளியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இதில் மாணவர்களுக்கு வருங்காலங்களுக்கு ஏற்றபடி கல்வி கற்பிக்கப்படும் எனவும் , மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சுய உணர்வை உறுதிப்படுத்தி கற்க அறிவுரை வழங்கினார்.

இரண்டாவது நாளாக இன்று காலை காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் ஹேர்ட் இன் ஹேண்ட் தனியார் தொண்டு அமைப்பின் மூலம் நடத்தபடும் பூங்காவனம் உண்டு உறவிடை பள்ளியினை ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்கள் யோகா மற்றும் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற செய்முறை முறையில் அமைச்சருக்கு செய்து காட்டினர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை, வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் வகுப்பு மூலம் பாடம் நடத்தும் முறையினை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

மாணவர்கள் கல்வி கற்க முக்கிய பங்காக வகிப்பது சுற்றுச்சூழல் எனவும் அதனை பள்ளி வளாகத்தில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் உடல் வலிமைக்கான கலைகளை உடன் கற்று தர வேண்டும் எனவும் இதன் மூலம் சிறந்த ஒரு மாணவனாக ஒழுக்கத்துடன் உருவாக இது உதவிடும் எனவும் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதன்பின் அதே பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு குழந்தைகளின் எடை அளவை கணக்கிட்டு சரியான சத்து உணவுகளை வழங்க செயல்படுத்தப்படும் முறைகளை கேட்டறிந்து குழந்தைகளுக்கு சத்து உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கி அதன் பயன்பாடுகளை தாய்மார்களிடம் கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி வகுப்பில் பயின்று வரும் மாணவர்களிடையே அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் உரையாடி இணையதள பயன்பாட்டின் மூலம் கல்வி கற்பதின் நன்மைகளைக் கேட்டறிந்து இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த உயர்கல்வி பெற வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

முத்தியால்பேட்டை அரசு பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உரையாடி எளிதாக கல்வி கற்க என்னென்ன தேவைப்படுகிறது எனவும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தொண்டு நிறுவன செயல் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Oct 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்