/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் : ரூ. 2.5 லட்சம் மற்றும் குங்குமச்சிமிழ் பறிமுதல்

மாவட்டத்தில் இதுவரை ரூ. 2.5 லட்சம் பணம் , ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஜரிகை டவல், குங்கமச்சிமிழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் : ரூ. 2.5 லட்சம் மற்றும் குங்குமச்சிமிழ்   பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட குங்குமச்சிமிழ்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றிய அலுவலகங்களில் இதற்கான வேட்பு மனு கடந்த 15ஆம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பொருட்கள் மற்றும் பணம் கொடுத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், சுழற்சி முறையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் ஒன்றிய எல்லையான பூஞ்சை வாகன சோதனையில், கணக்கில் இல்லாமல் எடுத்து வந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 80 ரூபாயும் மற்றொரு பகுதியில் ஒரு லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.



இதேபோல், பொன்னேரி கரைப் பகுதியில் அனுமதியின்றி காரில் எடுத்து வரப்பட்ட 300 ஜரிகை டவல் மற்றும் இந்திரா நகர் பகுதியில் காரில் எடுத்து வரப்பட்ட சிறிய குத்துவிளக்கு,

குங்கமசிமிழ் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Updated On: 21 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  2. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்