/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்
X

காஞ்சிபுரத்தில் பெய்த கனமழை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என உருவாகி வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பாலாறு, செய்யாறு ஆகியவற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து பல இடங்களில் முடங்கியது.

இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத பொதுமக்களுக்கு, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை மற்றும் தொடர் சாரல் மழை பொழிகிறது.

உத்திரமேரூர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து காலை 6 மணி வரை 32மிமீ மழை பெய்து உள்ளது. இந்நிலையில் தற்போது வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி தற்போது குறைந்த நிலையில் மீண்டும் மழையா என அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 12 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!