/* */

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன்  பெண்கள் சாலைமறியல்
X

காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத மழை பெய்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோர பகுதியில் அமைந்துள்ள குடிநீர் இணைப்பு அனைத்தும் சேதமடைந்து, காஞ்சிபுரம் நகர் மற்றும் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காத பகுதிகளில், லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அறிவுறுத்தபட்டது. அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெருவில், ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என, அப்பகுதி பெண்கள் 20க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி வழியாக வந்த, தனிப்பிரிவு ஆய்வாளர் பிரபாகரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்து, மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 17 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  4. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  5. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  6. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  8. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  10. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்