/* */

செவிலிமேடு : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக் காலனி பகுதி பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செவிலிமேடு : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
X

காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை செல்லும் சாலையில்,  காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய போலீசார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த செவிலிமேடு மேட்டுக்காலனி பகுதியில், 126 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக குடிநீரை, மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்றும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலரும் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை செல்லும் சாலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அப்பகுதியை சேர்ந்த மோகன் தலைமை வகித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அண்மையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடிநீர் எடுத்துச் செல்லும் பைப்புகளை வெள்ளநீர் இழுத்து சென்று விட்டதால் குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை. விரைவில் குடிநீர் பைப்புகள் புதியதாக போடப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On: 20 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?