/* */

சைபர் குற்றங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7 கோடி மோசடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 100 புகார்கள் பெறப்படுகிறதாகவும் , தற்போது விழிப்புணர்வு காரணமாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

சைபர் குற்றங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7 கோடி மோசடி
X

தற்போதைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சிகள் ஒருபுறம் மக்களுக்கு வளர்ச்சியை தந்தாலும் மற்றொருபுறம் அதில் நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு உள்ளது என்பது நாள்தோறும் செய்தி மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் உறவினர்களின் தகவல்கள் நம்மை பெரிதும் அச்சப்பட வைக்கிறது.

சமீப காலங்களில் சைபர் க்ரைம் எனும் குற்றங்கள் அதிக அளவில் கணினி மற்றும் செல்போன் மூலம் நடைபெறுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகள் இதிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நாள் தோறும் ஏமாறுவார்கள் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.

முகநூல் பக்கத்தில் திரைப்பட நடிகர்கள் படங்களை கொண்டு போலி முகவரியில் பொதுமக்களிடமும் குறிப்பாக பெண்கள் இளைஞர்களிடம் நட்பு ரீதியாக பேசி அதன் பின் அவர்களின் நிலைமையை கண்காணித்து வேலை வாய்ப்பு திருமணம் உள்ளிட்டு வேலை கூறி பணம் பறித்தல் வேலைகளில் விஞ்ஞான குற்றவாளிகள் ஈடுபடுவது தற்போது வாடிக்கையாக வருகிறது.

கிரைம் வழக்குகளை விசாரிக்க தனி பிரிவு காவல் துறையில் இருந்து வருகிறது இதில் மாதம் தோறும் 100 புகார்கள் பெறப்படுவதாகவும், கடந்த 2022 ல் மட்டும் 900 பேர் சைபர் கிரைமில் பாதிக்கப்பட்டு புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2001 முதல் தற்போது வரை சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை இது போன்ற வகையில் இழந்துள்ளனர். இதில் நாலு கோடி ரூபாய் பணத்தை சைபர் க்ரைம் உடனடியாக குற்றம் புரிந்தவரின் கணக்கை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான குற்றங்கள் வாட்ஸ் அப், முகநூல் வழியாக தொடர்பு கொண்டு அதில் குறிப்பிடப்பட்ட இணைப்பை பெற முயற்சிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதன்மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனைத்தும் எழுந்து வருவதும் வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பதும் எல்ஐசி மின்சாரம் உள்ளிட்ட பொது நிறுவனங்களின் அறிவுறுத்தல் எனக் கூறி பணம் பறித்தல் உள்ளிட்டவைகள் சில குறிப்பிடப்பட்ட குற்ற நிகழ்வுகளாக தொடர்ச்சியாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சியில் உள்ள பெண்ணிடம் ஈரோடு சகோதரர்கள் அவருடைய புகைப்படத்தை பெற்றுக்கொண்டு தவறாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடப் போவதாக கூறி ரூபாய் 2 லட்சம் பெற்றுள்ளதும், மீண்டும் பணம் பறிக்க முயன்ற போது சைபர் கிரைம் காவல்துறையின் மூலம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் பெண்கள் கல்லூரி, பெண்கள் பணி புரியும் தொழிற்சாலைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இது போன்ற குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது செல்போன் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்டவைகளில் எந்த மாதிரி செயல்படுவது, புகைப்படங்களை பகிர்கள் மற்றும் அந்தரங்க விஷயங்களை தெரிவித்தல் உள்ளிட்டவைகளை தவிர்க்குமாறு கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

சந்தேகப்படும் படியான லிங்குகள் அல்லது தொலைபேசி எண்கள் வந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 தொடர்பு கொண்டு தங்களது புகார் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் கூறியுள்ளனர்

Updated On: 8 Feb 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?