முட்டைகள் மீது பத்மாசனம் செய்து ‌யோகா விழிப்புணர்வு: பெண் மருத்துவர் அசத்தல்

International Day Of Yoga is Celebrated On -9 மாத நிறை கர்ப்பிணி பெண் மருத்துவர் 60 முட்டைகள் மீது 80 நொடிகள் அமர்ந்து கடினமான ஆசனத்தை செய்தது வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முட்டைகள் மீது பத்மாசனம் செய்து ‌யோகா விழிப்புணர்வு: பெண் மருத்துவர் அசத்தல்
X

60 முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் மருத்துவர் பானுப்பிரியா சரத்குமார்.

International Day Of Yoga is Celebrated On - காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், வீரகாளியம்மன் ஒத்தவாடை தெரு சேர்ந்த நெசவாளி சீனிவாசன்-சுசிலா தம்பதியினர் மகளான 9 மாத கர்ப்பிணி பெண் சித்த மருத்துவர் டாக்டர் பானுப்பிரியா சரத்குமார்.

இவர் தனது 7 வயது முதலே யோகாவின் மீது அதீத ஆர்வம் கொண்டு முறையாக பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று பரிசுகளை மாநிலளவில் பெற்றுள்ளார். இவரது திறமையைக் கண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இவருக்கு நினைவு பரிசினை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டார். தற்போது 9 மாத நிறை மாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு மருத்துவர் மற்றும் பயிற்சியாளர் ஆலோசனையின் பேரில் தனது வீட்டில் 60 முட்டைகளின் மீது அமர்ந்து எண்பது நொடிகள் பத்மாசனம் மேற்கொண்டு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து மருத்துவர் பானுப்பிரியா சரத்குமார் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காலகட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் என பலதரப்பினரும் மொபைல் போன், கம்ப்யூட்டர் என திசைமாறி சென்றனர். இக்காலகட்டத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு தனது மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி மேற்கொண்டு இருக்கலாம். தற்போது யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்றபோதும், மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி இந்த நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார். பேறு காலத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி யோகா பயிற்சி மேற்கொண்டு மனஅழுத்தம் மற்றும் உடல் நலத்தினை பாதுகாக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். சாதாரணமாக பத்மாசனம் மேற்கொள்வது கடும் சிரமம் என்றாலும் முட்டை மீது இந்த ஆசனப் பயிற்சியை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ தற்போது காஞ்சிபுரம் வைரலாகி வருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-23T16:14:46+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்