/* */

தனியார் தொழிற்சாலை சார்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை: ஆட்சியர் திறந்து வைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள இதன் மூலம் மூலம் 60 முதல் 70 படுகைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்க வகையில் உற்பத்தி திறன் கொண்டது.

HIGHLIGHTS

தனியார் தொழிற்சாலை சார்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை: ஆட்சியர் திறந்து வைப்பு
X

 தனியார் தொழிற்சாலை தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ50 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ஸ்ரீபெரும்புதூர் , இருங்காட்டுகோட்டை , சுங்குவார்சத்திரம் , ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளது.

நீ தொழிற்சாலைகள் தங்களது சமூக பங்களிப்பு நிதியின் மூலம் சமுதாயகூடம் , பள்ளி கூட வகுப்பறைகள் , கழிவறைகள் என பல்வேறு நல திட்டங்கள் உதவிகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செய்து வருகிறது.

அவ்வகையில் ஓரகடம் பகுதியில் அமைந்துள்ள டான்போஸ் நிறுவனம் தமது சமூகப் பங்களிப்பு நிலையில் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 250 lpm உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்தது.

இன்று இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா ஆர்த்தி நோயாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆட்சியில் குறைந்தபட்சம் 50 -70 படுக்கைகளுக்கு அளிக்க உதவும்.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகி கூறுகையில் , கடந்த கோவிட் காலங்களில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நண்கொடை அளித்தும் , தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு தடுப்பூசி அளித்தது உள்ளிட்ட பல்வேறு சமூக நல பயன்பாட்டுகளை ரூபாய் 1.5 கோடியில் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்சாலை தலைமை நிர்வாகி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிவருத்ரய்யா , மருத்துவர்கள் தொழிற்சாலை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?