காஞ்சிபுரம் பாலாறு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் பாலாறு மேம்பாலத்தில் இருசக்கரவாகனம் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் பாலாறு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

காஞ்சிபுரம் குருவிமலை பாலாற்றில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்த கண்ணன்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாறு மேம்பாலத்தில் ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலி தொழிலாளி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்னி வேன் முன் பகுதி நசுங்கிய நிலையில் வேன் டிரைவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன். இவர் காஞ்சிபுரத்தில் வேலை நிமித்தமாக சென்று விட்டு குருவிமலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

குருவிமலை பாலாற்று மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரம் நோக்கி பாக் வேகமாக வந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் கூலி தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் ஆம்னி வேனில் முன் பகுதி முழுவதுமாக நசுங்கிய நிலையில் வேனை ஒட்டி வந்த பெருமாள் வேனினுள் சிக்கி உயிருக்கு போராடினார்.

உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து, கடப்பாரையின் உதவியால் ஆம்னி வேனின் முன் பக்கத்தினை நெம்பி படுகாயம் அடைந்த பெருமாளை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த கூலித் தொழிலாளி கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 May 2023 11:48 AM GMT

Related News