/* */

ரூ.1.65 கோடியில் புதிய மின்மாற்றி : பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடக்கி வைப்பு

விரிவாக்கம், அதிக மின்பயன்பாடு காரணமாக மின்தடை ஏற்படுவதாக காஞ்சிபுரம் எம்எல்ஏ- எழிலரசனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

ரூ.1.65 கோடியில் புதிய மின்மாற்றி : பயன்பாட்டிற்கு  அமைச்சர் தொடக்கி  வைப்பு
X

காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டை பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை மின் நிலையம். இங்கிருந்து காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நகர விரிவாக்கம் மற்றும் மின் பயன்பாடு அதிகம் காரணமாக அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அங்கு செயல்பட்டு வந்த மின்மாற்றி திறன் குறைந்து செயலிழந்து விட்டது.

இதை அறிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், மின்சார வாரியத்திடம் காஞ்சிபுரம் நகர் விரிவாக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்து புதிய மின் மாற்றி வழங்குமாறு மின்சார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில், ரூ. 1.65 கோடி மதிப்பில் 25MVA திறன் கொண்ட புதிய மின் மாற்றி, கடந்த பத்து தினங்களாக நிர்மாணிக்கப்பட்டு இன்று அதனை மக்கள் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலையில் தமிழக ஊரக தொழில் தறை அமைச்சர் தாமோதரன் தொடக்கி வைத்தார்.

இதன்மூலம், மின் தடை இல்லா நகரமாக காஞ்சிபுரம் மாறும் எனவும், பொதுமக்கள் தரமற்ற மின் சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் இவ்விழாவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் , மின்வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Updated On: 30 July 2021 2:30 PM GMT

Related News