ரூ 8 லட்சம் மதிப்பிலான இரு மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த எம்எல்ஏ

ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான மின்மாற்றிகள் நகரின் இருவேறு பகுதிகளில் காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரூ 8 லட்சம் மதிப்பிலான இரு மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த எம்எல்ஏ
X

காஞ்சிபுரத்தில் ரூ 8 லட்சம் மதிப்பில் இரண்டு மின் மாற்றிகளை எம்எல்ஏ எழிலரசன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் நகரினையொட்டி சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் , ஒரகடம், மாங்கால் என பல பகுதிகளில் தொழிற்சாலை அதிகம் காரணமாக காஞ்சிபுரம் நகரம் பல்வேறு பகுதிகள் புதிய வளர்ச்சி எட்டியது. இதில் புதிய குடியிருப்புகளும், பழைய வீடுகளை மாற்றம் செய்து புதிய அடுக்குமாடி வீடுகளில் அதிக அளவில் உருவாகியது.

இதுபோன்ற சூழ்நிலையில் காஞ்சிபுரம் நகரில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காஞ்சிபுரம் நகரின் அனைத்துப் பகுதிகளும் அடிப்படை வசதிகளான மின்சாரம் உறுதி செய்யப்படும் என தனது வாக்குறுதியில் எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்திருந்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டை பகுதியில் பல கோடி மதிப்பில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பிரித்தளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் 20வது வட்டத்தை சேர்ந்த இருவேறு பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்தடை இரவில் ஏற்படுவதாகும் தொழிற்சாலை உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்த தங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் முதியோர் உள்ளிட்டவர்கள் சிரமம் அடைவதாக காஞ்சி சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் சுந்தரி அவின்யு , கச்சபேஸ்வரர் நகர் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் , மின்வாரிய அதிகாரிகள், நீலகண்டன் , கமல் உள்ளிட்ட நகர திமுக பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
 2. ஈரோடு
  ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர்...
 3. நாமக்கல்
  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
 4. திருத்தணி
  ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி...
 5. கும்பகோணம்
  கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
 7. மன்னார்குடி
  மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது
 9. தொண்டாமுத்தூர்
  கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30