/* */

காஞ்சிபுரத்தில் மாபெரும் மருத்துவ முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மாபெரும் மருத்துவ முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

சி.வி.எம்.அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் இருதய பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எழுபதாவது பிறந்த நாள் மார்ச் 1 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழகம் முழுவதும் சிறப்பாக அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கியும், நாள்தோறும் நண்பகலில் சிறப்பு சைவ , அசைவ உணவுகள் வழங்கி ஒரு மாத காலமாக திட்டமிடலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் 51 வார்டுகளிலும் பல்வேறு திமுக பிரிவுகள் சார்பில் நாள்தோறும் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளும் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் தாத்தாவும், முன்னாள் தமிழக அமைச்சருமான செந்தமிழ்செல்வர் சிவிஎம் அண்ணாமலை பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை காஞ்சிபுரம் மாநகரத்தில் வருடத்திற்கு மூன்று முறை சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தி வருகிறது.

அவ்வகையில் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை , செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, லைப் கேர் மருத்துவமனை, இந்திய பல் மருத்துவ சங்கம் , குமார் கண் சிகிச்சை மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தினர்.

இந்த மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , ஏழிலரசன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். விழாவில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், முதல்வர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதாகவும் இம்முகாமில் இருதயம் பல் எலும்பு மூட்டு கண் ரத்த அழுத்தம் ரத்த சர்க்கரை இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்காக தனியார் மருத்துவமனைகளும் நமக்கு இலவசமாக பரிசேதனை மேற்கொள்ள வருகை புரிந்துள்ளதாகவும் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்களது நோய்களை கண்டறிந்தும் உடல்நிலை குறித்த ஆலோசனைகளும் சிறப்பு மருத்துவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர் திலகர் , தசரதன் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ், நிர்மலா, குமரன், பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், ஏகாம்பரநாதர் திருக்கோயில் அறங்காவலர் ஜெகநாதன், ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இம் மருத்துவ முகாமில் பங்கேற்று வருகின்றனர். மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

Updated On: 19 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?