/* */

நவம்பர் 26ம் தேதி விவசாய நலன் காக்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நவம்பர் 26ம் தேதி விவசாய நலன் காக்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
X

காஞ்சிபுரத்தில் 26ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.11.2021 (வெள்ளிக்கிழமை ) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடை பெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணையவழி விவசாயிகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து மேற்கண்ட திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

1. ஆதார் அட்டை- நகல்

2. சிட்டா, அடங்கல்- நகல்

3. நில வரை படம்- நகல்

4. ரேஷன் கார்டு- நகல்

5. பாஸ்போட் சைஸ் போட்டோ - 1

6. இணையவழி சிறு / குறு விவசாய சான்று உள்ளிட்ட ஆவணங்கள் எடுத்து வந்து பதிவுகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?