/* */

மாண்டஸ் புயல் - பொது மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

மாண்டஸ் புயல் - பொது மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் அறிவுரை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 08.12.2022, 09.12.2022 மற்றும் 10.12.2022 ஆகிய தேதிகளில் பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கான புயல் கால அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கூறி உள்ள அறிவுரைகள் வருமாறு:-

• பலத்த காற்று வீசும் போது பதட்டப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த எச்சரிக்கை செய்திகளை கண்காணிக்கவேண்டும்.

• பலத்த காற்று வீசும் போது அரசு அறிவுறுத்தும் வரை, வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கி இருக்க வேண்டும். பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்கவேண்டும்.

• தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளவேண்டும்.

• பலத்த காற்று வீசும் போது வாகனத்தில் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

• மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உலோக பொருட்கள் அருகில் நிற்பதை தவிர்க்கவேண்டும்.

• வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை கவனமுடன் கையாளவேண்டும்.

• வீட்டில் உள்ள கதவுகள் கண்ணாடி சாலரங்கள் ஆகியவற்றை மூடிவைக்க வேண்டும்.

• காற்று வீசுவது நின்றுவிட்டால் புயல் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் எதிர்திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால் தேவையின்றி உடனே வெளியில் வரக்கூடாது.

• காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்.

• கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டியே தங்க வைக்கவேண்டும்.

• கூரைவீடு, ஓடு வீடு மற்றும் தகரசீட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் பலத்த காற்று வீசும்போது அரசு அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே சென்று விடவேண்டும்.

• நீர்நிலைகளில் மீன்பிடித்தல், குளித்தல் மற்றும் வேடிக்கை பார்க்க செல்லகூடாது.

• தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம்.

• இடி மின்னலின்போது மரத்தின்கீழோ, பொதுவெளியிலோ இருக்க வேண்டாம்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை( 24 X 7 மணி நேரம்) தொலைபேசி எண்கள் மற்றும் சமூக வளைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்.

பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.தொலைபேசி 044-27237107 : 044-27237207., கைபேசி / வாட்ஸ்அப்எண் 9345440662

சமூகவலைதளங்கள்

Twitter @KanchiCollector

@DDMAKANCHIPURAM

Facebook @kanchicolltr

Instagram @kanchicolltr

*அவசர கால உதவிஎண்கள்*

காவல் உதவி எண் 100

தீயணைப்பு அவசர எண் 101

ஆம்புலன்ஸ் 108

மருத்துவ உதவி அவசர எண் 104

குழந்தைகள் உதவி எண் 1098

பெண்கள் உதவி எண் 1091

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார்.

Updated On: 7 Dec 2022 1:33 PM GMT

Related News