/* */

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?

காஞ்சிபுரம் நகரில் சங்கர மடம் மற்றும் கோயில் அருகே உள்ள மதுக்கடை வளாகத்தில் 24 மணி நேரமும் மது கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும்  மது விற்பனையா?
X

காஞ்சிபுரம் பேருந்து நிலைய வெளிப்புற பேருந்து நிறுத்தம் அருகில் அதிகாலையிலேயே சாலை வீழ்ந்து கிடக்கும் போதை நபர்‌

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 12 முதல் இரவு 10 வரை மதுபானங்கள் விற்கப்படுகிறது.

அரசு மதுபான கடைகள் மூலம் குறைந்த வருவாய் ஈட்டும் நபர்களின் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறி மதுபான கடைகளை மூடக்கோரி பெண்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் மதுபான கடைகள் வேலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் காஞ்சிபுரம் நகரில் சங்கரமடம் அருகில் பெரிய காஞ்சிபுரம் காய்கறி சந்தை அருகே செயல்படும் மதுபான கடையும், பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்காரத் தெருவில் சித்தர் குப்தர் கோயில் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வளாகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

அதிகாலை வேலைக்கு வரும் கூலி தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பு மது பிரியர்களும் அதிகாரியிலேயே கள்ள சந்தையில் மதுபானங்கள் வாங்கி குடித்து தன்னிலை மருந்து பல்வேறு இடத்தில் விழுந்து கிடக்கின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளியே நிழற்குடை அருகே காலை 8 மணிக்கு சாலையில் விழுந்து கிடக்கும் போதை ஆசாமியை எழுப்ப பலமுறை முயற்சித்தும் இயலாதால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை பேருந்து நிலையங்களை ஓரமாக படுக்க வைத்துள்ளனர்.

அந்த நபர் ஏதோ சுப நிகழ்ச்சிக்கு செல்ல பூக்கடை சத்திரம் சென்று பூக்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் அளவுக்கு அதிகமான மது அருந்தி சாலையில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

அரசு மதுபான கடை வேலை நேரம் ஆரம்பிப்பதற்குள் அதிகாலையிலேயே மது விற்பனை செய்யப்படுவதால் இது போன்ற பலர் பணத்தை மட்டுமில்லாமல் , தன்மானத்தையும் பெரிதும் இழக்கின்றனர்.

இதனை கண்காணித்து கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் , காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

Updated On: 20 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?