சமையலறை அருகே கழிவறையா ? சட்டமன்ற ஏடுகள் குழு அதிருப்தி

கீழ்க்கதிர்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட குழுவினர் வீடுகள் அதிருப்தி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சமையலறை அருகே கழிவறையா ? சட்டமன்ற ஏடுகள் குழு அதிருப்தி
X

கீழ்கதிர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சமையலறை அருகே கழிவறையை அமைந்துள்ளதை பார்த்து அதிருப்தி தெரிவித்த சட்டமன்ற ஏடுகள் குழு.

தமிழ்நாடு சட்டபேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு இன்று காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி , சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் , சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், சட்டமன்ற பேரவை தலைமை நிருபர் வரதராஜன் உள்ளடங்கிய குழுவினர் இன்று காலை காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.

கதர் கிராம தொழில் வாரிய சார்பில் அரக்கோணம் அருகே உள்ள மண்பாண்டங்கள் உற்பத்தி பகுதிகளை பார்வையிட்டார். அதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் திம்மசமுத்திரம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.


அதன்பின் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 2000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு அமைப்புகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த மக்கள் அவர்களிடம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி மனு அளித்தனர்.

குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட குழுவினர் வீடுகள் அமைப்பு மற்றும் அளவுகள், தற்போது குடியிருக்கும் நபர்கள் எண்ணிக்கை மற்றும் இங்குள்ள வசதிகள் குறித்து வாரிய பொறியாளர் அவர்களுக்கு விளக்கி கூறினார்.

இதன்பின் வீடுகளை ஆய்வு செய்த சட்டமன்ற ஏடுகள் குழு தலைவர் எம் எல் ஏ ராமகிருஷ்ணன் வீடுகள் அமைப்பில் சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பொறியாளரிடம் தெரிவித்தார்.

வீட்டின் அனைத்து பகுதிகளும் நல்ல நிலையில் உள்ளதாகவும் , சமையலறையுடன் கழிவறை அமைத்துள்ளது சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதை முறையாக கவனித்து இருக்க வேண்டும் எனவும் அலுவலரிடம் தெரிவித்தார்.

இதன் பின் மாலை நாலு மணி அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் அதனை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து முறையாக பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுடவும் , அதனை 100% உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


கூட்ட நிறைவிற்கு பின், செய்தியாளர்கள் வீட்டு அமைப்பில் சற்று மன வருத்தம் ஏற்பட்டது குறித்து கேட்டபோது, அதை தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பதும் இனிவரும் காலங்களில் கட்டாயம் இது போன்று இருக்காது எனவும் இதை அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த செயல்திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2023 1:30 PM GMT

Related News

Latest News

 1. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 2. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 3. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 4. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 5. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 6. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 7. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
 8. சினிமா
  வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை
 9. லைஃப்ஸ்டைல்
  143 meaning in tamil-143 என்பது எதை குறிக்கிறது..? இளைஞர்களின் கனவு...
 10. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 வட்டாட்சியர்கள் ஒரே நாளில் பணியிட...