/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற வழக்கில் இருவர் கைது..!

சென்னை - பெங்களூரு விரைவு சாலைக்கு நிலம் எடுத்த விவகாரத்தில் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் முதன்முறையாக 7.5 ஏக்கர் விற்ற இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற வழக்கில் இருவர் கைது..!
X

சென்னை பெங்களூரு விரைவு சாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பீமன் தாங்கள் கிராமத்தில் அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கு விற்ற வகையில் அரசுக்கு சுமார் 200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நான்கு நில எடுப்பு அலுவலர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியான நிலம் ஏமாற்றி விற்ற சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்கிற ஆஷிஷ் மேத்தா மற்றும் அவரது நிலத்தை பவர் வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் , சிவன் தாங்கல் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகியோர் 7.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு விற்றது உறுதியானது.

அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக முதல்முறையாக இரு நிலம் விற்றவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களைத் தொடர்ந்து பலர் கைது செய்யக் கூடும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.



Updated On: 23 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  2. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  4. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  6. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  7. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  8. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  9. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  10. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு