/* */

வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை அறிந்து கல்வி கற்க வேண்டும் - டாக்டர் அனுராதா

சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்கள் உடன் பட்டய படிப்பும் பயின்று வருகின்றனர்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை அறிந்து கல்வி கற்க  வேண்டும் - டாக்டர் அனுராதா
X

காஞ்சிபுரம் சங்கரா  கலை அறிவியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு குறித்த பட்டய பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து உரையாற்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா.

தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்வி கற்கும் போதே உடன் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய பட்டய படிப்புகளையும் கற்று கல்வி காலம் முடிந்தவுடன் உடனடி வேலைவாய்ப்பை பெறும் வகையில் தற்போது வேலை வாய்ப்பு துறை சார்பில் பல்வேறு பட்டய படிப்புகள் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் போது குறுகிய கால பட்டையை பயிற்சியை பெரும் வகையில் கல்லூரி நிறுவனங்களும் இதனை தற்போது செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையில் உள்ள அதிக வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் பட்டய படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் தரம் பற்றிய பட்டயப்படிப்பு அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் தரம் பற்றிய பட்டயப்படிப்பு அறிமுக விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

கல்லூரியின் நுண்ணுயிரியியல் துறையின் தலைவர் ஜி.சுரேஷ் முன்னிலை வகித்தார். பட்டயப்படிப்பை தொடக்கி வைத்து உணவில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமைகளை செய்முறை விளக்கத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தி.அனுராதா பேசினார்.

சங்கரா கல்லூரியில் கடந்த ஆண்டு முதல் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பட்டயப்படிப்பு கற்கும் வாய்ப்பை அளித்து வருகிறது.

இவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேலை மற்றும் விடுமுறை நாட்களில் இந்த பட்டையை படிப்பும் உடன் இணைந்து கற்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளனர்.

இன்று நடைபெற்ற அறிமுக விழாவில் டாக்டர் அனுராதா கலந்து கொண்டு இயற்கையான கலப்படமற்ற உணவுகளை தேர்வு செய்தல், கலப்பட உணவுப் பொருட்களை எவ்வாறு கண்டறிதல், இயற்கை உணவுகளால் ஏற்படும் நன்மைகள், துரித உணவுகளில் தயார் செய்யப்படும் உணவுகளால் உடல் பாதிப்பு எவ்வகையில் ஏற்படுகிறது என்பதை செயல்முறை விளக்க வடிவில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய முதல்வர் வெங்கடேசன், கல்லூரி படிப்பு நிறைவு பெறும்போதே உடன் வேலை வாய்ப்பைக் கிடைக்கக்கூடிய துறைகளை கண்டறிந்து அதை மாணவர்களுக்கு அளித்து சிறந்த மாணவனாக அனுப்பும் நோக்கிலே சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

தற்போது உணவு பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளதால் , திறன் பட கல்வி கற்று ஆரோக்கியமான உணவுகள் முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த பட்டையை படிப்பு மிகவும் உதவும் என தெரிவித்தார்.

Updated On: 18 Oct 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!