/* */

காஞ்சி: கொரோனா காலத்தில் மனித நேயத்தை உயர்ப்பித்த தன்னார்வ இளைஞர்கள்!!

கொரோனா நோயால் பலர் இன்னலுக்கு ஆளான நிலையில் மனிதநேயமக்க செயல்களை காஞ்சிபுரம் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சி: கொரோனா காலத்தில் மனித நேயத்தை உயர்ப்பித்த தன்னார்வ இளைஞர்கள்!!
X

பசியால் வாடும் ஏழைகளை தேடிச் சென்று உணவுளிக்கும் இளைஞர்கள்.

உலகத்தையே கடந்த ஒரு வருடமாக காலமாக அதிர்ச்சி அடைய வைத்த கொடிய வைரஸான கொரோனா அரக்கன் பல்லாயிரக்கணக்கான உயிரை குடித்து அனைத்து தரப்பு மக்களையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. இன்னும் ஆழ்த்தி வருகிறது. பெரும் செல்வந்தர் முதல் கடைக்கோடி தொழிலாளி வரை தங்கள் உயிரை காத்துக் கொள்ளும் நிலை உருவானது.

தொழிற்சாலைகள் மூடல், போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் மூடல், இதுபோன்று பல முடக்கங்களால் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானதே என பெற்றோர் கவலை. இதனால் இளைஞர்களின் எண்ணங்கள் திசைமாறி போகுமோ என்ற கவலையும் கூடியது.

மரக்கன்று நடும் பணியில் இளைஞர்கள்

இவை அனைத்தையும் இப்போதைய இளைஞர்கள் தவிடுபொடியாக்கி அனைவருக்கும் நாங்கள் இருக்கிறோம் என உணர்த்தும் வகையில் மனிதநேயத்துடன் அனைத்து வகையான உதவிகளையும் உடனுக்குடன் செய்து பிறர் மேல் மனிதநேயம் கொள்ளுங்கள் எனக்கூறி சென்ற கலாமின் வார்த்தைகள் பின்பற்றி எதிர்காலத்தில் எவ்விதப் பேரிடர் வந்தாலும் அனைவருக்கும் தோள் கொடுக்க நாங்கள் உள்ளோம் என கூறும் வகையில் உணவளித்தல் , இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல், மரம் நடுதல், முன் களப்பணியாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தல் என அனைத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

கல்வி கற்பதில் மட்டுமல்ல. ஒழுக்கம், பிறர்பால் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட செய்கைகளால் பெற்றோர்களுக்கும் தங்கள் ஊர்களுக்கும் நற்பெயரை கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம் என கூறிவருகின்ற இக்கால இளைஞர்களை மகிழ்வித்து அனைவரும் வரவேற்போமாக..

Updated On: 6 Jun 2021 4:45 AM GMT

Related News