/* */

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழா: பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பொது மக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழா: பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை
X

காஞ்சிபுரம் பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறியதாவது :

கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து நீடித்து வருவதாலும் இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினாலும், பொதுமக்களின் நலன் கருதி, இத்திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா காஞ்சிபுரம் அறிவுறுத்தலின்படி, 13.01.2022 அன்று பொது மக்களின் தரிசனத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலின் ஆகம விதிகளின் படியும், பழக்க வழக்கத்தின்படியும் சன்னதிக்குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.

எனவே பக்தர்கள் வைகுண்டஏகாதசி நேரலையை 13.01.2022 அன்று காலை 6.00 மணிமுதல் https://youtu.be/nBsmNh1gTjI என்ற இணையதள முகவரியில் கண்டு வைகுண்ட பெருமாள் திருவருளை பெற்றிடவும், இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 11 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  6. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  9. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  10. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்