காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் - தேர்தல் பார்வை

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த பொது தகவல்கள், தேர்தல் கண்ணோட்டம் பின்வருமாறு:

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் - தேர்தல் பார்வை
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ம்தேதி முதல் கட்டமாக காஞ்சிபுரம், உத்தரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், அக்டோபர் 9ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் குறித்த பொது தகவல்கள் உங்கள் பார்வைக்காக. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறுகாவேரிபாக்கம் எனும் பகுதியில் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 40 கிராமங்களை உள்ளடக்கி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது..

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 கிராமங்களும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 24 கிராமங்களும் உள்ளன. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 51127 ஆண் வாக்காளர்களும், 54 ஆயிரத்து 705 பெண் வாக்காளர்களும் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 844 வாக்காளர்கள் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற ஏதுவாக 196 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய ஊராட்சியாக கோனேரிக்குப்பம் கிராம் ஊராட்சி உள்ளது. இதில் 11 ஆயிரத்து 356 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் குறைந்தபட்ச வாக்காளர் உள்ள ஊராட்சியாக முத்துவேடு கிராம ஊராட்சி 714 வாக்காளர்களை கொண்டுள்ளது.

3 கிராம ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இரண்டாயிரத்துக்கு குறைவான வாக்காளர்கள் 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. பத்து மேற்பட்ட வாக்குபதிவு மையங்கள் சிறுகாவேரிபாக்கம், கோனேரிக்குப்பம் மற்றும் தாமல் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சிகளில், வருவாய் என பார்க்கப்படும் போது, கனிமவள நிதிகள் சில கிராமங்களில் உள்ளன. இதுதவிர காஞ்சிபுரம் ஒன்றிய ஊராட்சி கிராம பகுதிகள் பாலாறு ஓட்டியுள்ளதால், அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கிராமங்களில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 Sep 2021 10:30 AM GMT

Related News